போதையில் அசிங்கமாக திட்டினார்!. அருள் விக்னேஷ் மீது குவியும் புகார்கள்...
பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியது தொடர்பாக கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது விசாரணை தொடங்கியிருக்கிறது. விரைவில் அவர் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கவிருக்கிறார். அனேகமாக அவரிடமிருந்து கட்சி பதவி மற்றும் எம்.எல்.ஏ பதவி பறிக்கப்படலாம் அல்லது அவரே கூட எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது..
இந்நிலையில்தான் அவரின் மீது மற்றொரு புகார் எழுந்துள்ளது. அருள் விக்னேஷின் வீட்டின் அருகே உள்ள ஹோட்டலில் பணிபுரிந்து வரும் சுரேஷ் என்கிற வாலிபர் செய்தியாளர்களிடம் பேசியபோது 2 மாதங்களுக்கு முன்பு அருள் கணேஷ் மது போதையில் வந்து எனது வாகனத்தின் மீது மோதிவிட்டார்.. வாகனம் சேதமடைந்தது குறித்து நான் அவரிடம் கேட்டபோது என்னை தகாத வார்த்தைகளில் திட்டியதுடன் அப்படித்தான் செய்வேன்.. நான் எம்.எல்.ஏ என்று மிரட்டினார். அவர் கள்ளக்குறிச்சி தொகுதிக்கு எந்தவிதமான புதிய திட்டங்களையும் கொண்டுவரவில்லை என பேசியிருந்தார்.
வாலிபர் சுரேஷ் செய்தியாளர்களிடம் விக்னேஷ் பற்றி பேசியதால் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்தவர்கள் அவரை சூழ்ந்து கொண்டு காவல்துறையினர் மூலம் அவர் பணிபுரியும் இடத்திலிருந்து அவரை வெளியேற்றினர். இதையடுத்து, தவெகவினரும் மற்ற கட்சியினர் போல்தான் நடந்துகொள்கிறார்கள் என அப்பகுதி மக்கள் பேச தொடங்கிவிட்டனர்.