1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. by election will be held after court case

தமிழகத்தில் 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது?.. தேர்தல் ஆணையம் பதில்!..

vijay
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது.தமிழக முதல்வர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். இதையடுத்து திருச்சி கிழக்கு தொகுதியில் அவர் ராஜினாமா செய்திருக்கிறார்.

ஒரு பக்கம் விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம், மதுராந்தகம், தாராபுரம், கரூ ஆகிய தொகுதிகளை சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் 6 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துவிட்டனர். எனவே தற்போது தமிழகத்தில் ஏழு தொகுதிகள் காலியாக இருக்கிறது. ஒருபக்கம் எம்.எல்.ஏக்கள் ராஜநாகம் ராஜினாமா செய்த விவகாரம் தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. எனவே இந்த 7 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்கிற கேள்வி பொது மக்களிடம் எழுந்திருக்கிறது..

இந்நிலையில், டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நானேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது அவரிடம் தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் சொன்ன அவர் ‘தமிழகத்தில் காலியாக உள்ள 7 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலில் நடத்த இன்னும் ஆறு மாத கால அவகாசம் இருக்கிறது.. நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அந்த வழக்கில் தீர்ப்பு வெளியான பின் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும்’ எனக் கூறியிருக்கிறார். .
About Writer
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... બધા વાંચો