1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. chief minister vijay very strick on posts

ஆணைய வாரிய தலைவர் பதவி!.. No ரெக்கமண்டேஷன்!. முதல்வர் விஜய் கறார்!

vijay
தமிழகத்தின் தற்போது தவெக ஆட்சி நடைபெற்று வருகிறது. யாருமே எதிர்பாக்காதபடி திமுக, அதிமுக இரண்டு கட்சிகளையும் பின்னுக்கு தள்ளிவிட்டு இரண்டு வருடங்களுக்கு முன்பு கட்சி துவங்கிய நடிகர் விஜய் தற்போது தமிழக முதலமைச்சராக மாறிவிட்டார். அதோடு தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் லஞ்சத்தை ஒழிக்கும் முயற்சியிலும் விஜய் தலைமையிலான தவெக அரசு இறங்கியிருக்கிறது.

அரசின் பல துறைகளிலும் லஞ்ச ஊழல் ஒழிக்கப்பட்டு வருவதாக தவெக அமைச்சர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். இந்நிலையில்தான் தமிழக அரசு துறையின் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பல்வேறு ஆணையங்கள் மற்றும் வாரியங்களின் தலைவர்  பதவிகளை பெறுவதற்காக பலரும் பணப்பெட்டியோடு தவெக ‘மகிழ்ச்சி’ அமைச்சரை தொடர்பு கொண்டு பேசி வருவதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில், ஆணைய வாரிய தலைவர் பதவிகளுக்கு யாரையும் என்னிடம் சிபாரிசு செய்ய வேண்டாம் என அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சியினருக்கு முதல்வர் விஜய் கறாராக சொல்லிவிட்டாராம்.  கடந்த திமுக ஆட்சியில் இந்த நியமனங்கள் முழுக்க முழுக்க ஸ்டாலின் குடும்பத்தினர் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்களின் பரிந்துரையின் கீழ் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.