1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 12 மே 2025 (08:50 IST)

இந்தியாவுக்குள்ள ‘கராச்சி’ பேக்கரியா? அடித்து துவம்சம் செய்த கும்பல்! - ஐதராபாத்தில் அதிர்ச்சி!

Karachi Bakery

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடந்து வரும் நிலையில் ஐதராபாத்தில் உள்ள ‘கராச்சி பேக்கரி’யை சிலர் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடந்து வந்த நிலையில் இந்தியா முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துகளை மக்கள் தெரிவித்து வந்தனர். பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதல்கள் குறித்து கோபங்களை வெளிப்படுத்தி வந்தனர். இந்நிலையில்தான் ஐதராபாத்தில் உள்ள கராச்சி பேக்கரி என்ற அடுமனையை சிலர் தாக்கியுள்ளனர்.

 

பாகிஸ்தான் நகரமான கராச்சியின் பெயரைக் கொண்டிருந்தாலும் அந்த பேக்கரி 1956ம் ஆண்டில் கான்சந்த் ரம்னானி என்ற இந்து நபரால் உருவாக்கப்பட்டதாகும். ஐதராபாத்தின் கலாச்சார அடையாளங்களோடு தொடர்புபடுத்தி கராச்சி பேக்கரி என பெயர் பெற்ற இந்த பேக்கரி ஐதராபாத்தில் மிகவும் பிரபலமானதாகும்.

 

அது தெரியாமல் கடையின் பெயரை மாற்றக் கோரி ‘பாரத் மாதா கி ஜே’ என கோஷமிட்டு வந்த கும்பல், கடையின் பெயர் பலகையை உடைத்ததுடன், கடையையும் சேதப்படுத்தி சென்றிருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Edit by Prasanth.K