வியாழன், 24 ஏப்ரல் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 24 ஏப்ரல் 2025 (13:45 IST)

என்னப்பா இது வாங்குன டிக்கெட்ட அதே ரேட்டுக்கு வித்துட்டு இருக்காங்க… சிஎஸ்கே பரிதாபங்கள்!

நடப்பு ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பரிதாபகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் கேப்டன் ருத்துராஜ் கையில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகினார். அவருக்குப் பதில் தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். ஆனாலும் ‘எந்தப் பயனும் இல்லை’ என ரசிகர்கள் புலம்பித் தவிக்கின்றனர்.

இந்நிலையில் சிஎஸ்கே அணி அடுத்து மோதவுள்ள போட்டிக்கான டிக்கெட் விற்பனை சரிவை சந்தித்தது. வழக்கமாக சி எஸ் கே அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை அறிவித்த உடனேயே ஆன்லைனில் விற்றுத் தீர்ந்துவிடும். அதன் பின்னர் கள்ளச்சந்தையில் பல மடங்கு விலையேற்றப்பட்டு விற்கப்படும். ஆனால் இந்த போட்டிக்கான டிக்கெட்கள் விறபனை மந்தமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இப்போது அதை விட மோசமாக ஏற்கனவே டிக்கெட்டை ஆன்லைனில் வாங்கியவர்கள் கூட வாங்கிய விலைக்கு டிக்கெட்டை இணையத்தில் #cskmatchticket என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி விற்று வருகின்றனர்.