1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 15 மே 2025 (11:00 IST)

ஆபரேஷன் சிந்தூருக்கு பின் ஜம்மு காஷ்மீரில் ஆய்வு.. நேரில் செல்கிறார் ராஜ்நாத் சிங்..!

Rajnath Singh
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பிறகு, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று  ஜம்மு-காஷ்மீர் பயணம் செய்கிறார்.
 
பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா கடுமையான பதிலடி கொடுத்தது. இதற்குப் பெயர் தான் ‘ஆபரேஷன் சிந்தூர்’. பாகிஸ்தான் எல்லையை கடந்து வந்து தீவிரவாதிகள்தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி தான் இது.
 
இதையடுத்து, ஜம்மு-காஷ்மீரின் சில பகுதிகளில் பாகிஸ்தான் சார்பான தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டனர். எனினும், கடந்த சனிக்கிழமை இரவு, இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உடன்பட்டதை தொடர்ந்து எல்லை பகுதிகளில் அமைதி நிலை மீண்டும் ஏற்பட ஆரம்பித்துள்ளது.
 
இந்நிலையில், பாதுகாப்பு நிலவரத்தை நேரில் பார்வையிடும் நோக்கத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஜம்மு-காஷ்மீர் செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
அவர், முதலில் ஸ்ரீநகரில் உள்ள ராணுவ முகாம்களை பார்வையிட்டு, ராணுவ வீரர்களுடன் சந்தித்து பேச உள்ளார். மேலும், ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹாவுடனும் அவர் ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran