இந்தியாவின் பாஸ்போர்ட்டுகளில் மோசடிகள் நடைபெறுவதை தடுக்கும் விதமாக புதிய e-Passport அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு மக்கள் செல்ல பாஸ்போர்ட் அவசியமானதாக இருக்கிறது. பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் பல முறை சரி பார்க்கப்பட்டு, காவல் துறையினர் சோதித்து தகவல் அளிப்பது உள்ளிட்ட பல படிநிலைகளை தாண்டியே பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது.
ஆனால் அந்த பாஸ்போர்ட்டில் புகைப்படத்தை மாற்றுவது உள்ளிட்ட பல குற்றச்செயல்களில் சிலர் ஈடுபடுவதும் அதிகமாக உள்ளது. இதுபோன்ற மோசடி, குற்றச் செயல்களை தடுக்கும் விதமாக e-Passport சேவை இந்தியாவில் அமல்படுத்தப்படுகிறது.
இந்த இ-பாஸ்போர்ட்டில் கடைசி பக்கத்தில் RFID சிப் பொருத்தப்பட்டிருக்கும். அதில் பாஸ்போர்ட் பயனரின் தரவுகள், கை ரேகை, முக பதிவு ஆகியவை டிஜிட்டல் முறையில் அப்டேட் செய்யப்பட்டிருக்கும். எனவே அதில் உள்ள விவரங்களை மாற்ற முடியாது. இந்த இ-பாஸ்போர்ட் முறையால் மோசடி சம்பவங்கள் தடுக்கப்படுவதுடன், விமான நிலையங்களில் பாஸ்போர்ட் சோதனை செய்வதும் எளிமையாகும் என கூறப்படுகிறது.
Edit by Prasanth.K