1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 15 மே 2025 (11:09 IST)

மசோதா நிறைவேற்ற காலக்கெடு நிர்ணயிப்பதா? உச்சநீதிமன்றத்திடம் கேள்வி எழுப்பிய ஜனாதிபதி..!

Murmu President
தமிழக அரசு கொண்டு வந்த சில மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி வழங்காமல் அதை கிடப்பில் வைத்திருந்ததை எதிர்த்து, மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 
 
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், “ஆளுநர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பும் மசோதாக்கள் மீது அவர் மூன்று மாதங்களில் முடிவெடுக்க வேண்டும். இந்த காலக்கெடுவுக்குள் முடிவு இல்லை என்றால், மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யலாம்” என தெரிவித்தனர்.
 
இதன் மூலம், முதல் முறையாக ஜனாதிபதியின் முடிவுக்கு நேரக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, “உச்சநீதிமன்றம் ஜனாதிபதிக்கு நேரம் குறிக்கலாமா?” என்ற விவாதம் எழுந்துள்ளது.
 
இந்நிலையில், ஆளுநர்களால் அனுப்பப்படும் மசோதாக்களில் ஜனாதிபதி மூன்று மாதத்தில் முடிவெடுக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தெளிவுபடுத்துமாறு, ஜனாதிபதி திரௌபதி முர்மு உச்சநீதிமன்றத்திற்கு 14 கேள்விகளை எழுப்பி விளக்கம் கேட்டுள்ளார்.
 
Edited by Mahendran