1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 5 மே 2025 (11:04 IST)

சபரிமலையில் பக்தர்களுக்கான முன்பதிவு நிறுத்தம்: என்ன காரணம்?

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனத்திற்காக வருகை தர இருப்பதால் பக்தர்களுக்கான முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
ஜனாதிபதி திரவுபதி முர்மு  வருகிற 18 அல்லது 19-ந்தேதியில் சபரிமலைக்கு செல்லலாம் என தகவல் தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும், எந்த நாளில் அவர் செல்லப்போகின்றார் என்பது உறுதியாகத் தெரியவில்லை.
 
சபரிமலை வருகையை முன்னிட்டு, ஜனாதிபதி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் நிலக்கல் செல்ல, அங்கிருந்து கார் மூலம் பம்பைக்கு செல்ல, பின்பு பம்பை இருந்து நடைபயணமாக கோவிலுக்கு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. சன்னிதானம் மற்றும் தேவசம் விருந்தினர் மாளிகையை பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். மேலும், சபரிமலை வருகைக்கு முன்னர் சாலையில் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
 
 Edited by Mahendran