வீட்டுப்பாடம் முடிக்காததால் தலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்ட 2ஆம் வகுப்பு மாணவன்.. தலைமை ஆசிரியை மீது வழக்கு..!
ஹரியானா மாநிலம் பானிபட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்த ஒரு கொடூர சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டுப் பாடம் முடிக்காததால், இரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் பள்ளி ஓட்டுநர் அஜய் என்பவரால் தலைகீழாக தொங்கவிடப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டான். இந்த சம்பவம் வீடியோவாக பதிவாகி சமூக வலைத்தளங்களில் பரவி, சிறுவனின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது.
மாணவனின் தாய், தலைமை ஆசிரியர் ரீனா தான் அஜய்யிடம் குழந்தையை தண்டிக்க சொன்னதாக குற்றம் சாட்டினார். மற்றொரு வீடியோவில், தலைமை ஆசிரியர் ரீனாவே மாணவர்களை அடிப்பது பதிவாகியுள்ளது. கல்வி அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களுக்கு எதிராக, உடல் ரீதியான தண்டனைகளை தான் வழங்குவதாக தலைமை ஆசிரியர் ஒப்புக்கொண்டார்.
சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, தலைமை ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
Edited by Mahendran