டிரம்ப் கலந்து கொள்ளும் உச்சிமாநாட்டில் மோடி கலந்து கொள்ள மறுப்பு.. சந்திப்பை தவிர்க்கவா?
மலேசியாவில் நடைபெற உள்ள ஆசியன் (ASEAN) உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் கலந்து கொள்ள இருக்கும் நிலையில், அவரது சந்திப்பை தவிர்ப்பதற்காகப் பிரதமர் மோடி இந்த மாநாட்டில் நேரடியாக கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மலேசியாவில் அக்டோபர் 26 ஆம் தேதி ஆசியன் உச்சி மாநாடு தொடங்க இருக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் வருகின்றனர். இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளதால், அவரை பிரதமர் மோடி சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போது வந்துள்ள தகவலின்படி, பிரதமர் மோடி இந்த மாநாட்டில் நேரடியாக கலந்து கொள்ளவில்லை என்றும், காணொளி காட்சி மூலம் கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே வர்த்தக போர் தீவிரமாக நடந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபரின் சந்திப்பை தவிர்ப்பதற்காகவே மோடி இந்த உச்சி மாநாட்டில் நேரடியாக கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
Edited by Siva