நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய திமுக எம்.எல்.ஏ திடீர் மரணம்.. மாரடைப்பு என தகவல்..!
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 74.
இரண்டு முறை சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், தற்போது எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வந்தார். இதற்கு முன்னதாக 2016 ஆம் ஆண்டு இதே தொகுதியில் போட்டியிட்டபோது அவர் தோல்வியை சந்தித்தார்.
சேந்தமங்கலம் தொகுதியில் மக்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்த பொன்னுசாமியின் மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பொன்னுசாமியின் மறைவு சேந்தமங்கலம் தொகுதி தி.மு.க.வினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva