ஞாயிறு, 28 செப்டம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 26 செப்டம்பர் 2025 (08:29 IST)

கனமழை எதிரொலி.. இன்று ஒரு மாவட்டத்திற்கு மட்டும் பள்ளிகள் விடுமுறை..

கனமழை எதிரொலி.. இன்று ஒரு மாவட்டத்திற்கு மட்டும் பள்ளிகள் விடுமுறை..
கனமழை காரணமாக இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று காலை முதல் சாரல் மழை பெய்தது. இரவில் கனமழை பெய்யத் தொடங்கியதால், கன்னியாகுமரி நாகர்கோவில் பகுதியில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. 
 
இதனை அடுத்து, இன்றும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருப்பதால், குமரியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 180 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும், இன்றும் அதே அளவு மழை பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி போன்ற மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva