செவ்வாய், 30 செப்டம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth K
Last Modified: ஞாயிறு, 28 செப்டம்பர் 2025 (08:38 IST)

பாலியல் குற்றவாளி சத்யானந்த சரஸ்வதி சாமியார் கைது! - டெல்லியில் தேடி பிடித்த போலீஸ்!

sathyananda saraswathi

17 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சாமியார் சத்யானந்த சரஸ்வதியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

 

டெல்லி வசந்த் கஞ்ச் பகுதியில் தனியார் கல்வியகத்தை நடத்தி வந்த சத்யானந்த சரஸ்வதி எனப்படும் பார்த்தசாரதி, கல்வியகத்தில் படிக்கும் பெண்களிடம் தவறாக நடந்துக் கொண்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த வாக்குமூலத்தின்படி, பெண்கள் விடுதியின் வாஷ்ரூம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்களை வைத்து சத்யானந்தா பெண்களை தனது மொபைல் போனிலேயே பார்த்து வந்ததாகவும், ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்புவது, இரவு நேரத்தில் அவர் அறைக்கு அழைப்பது என பல வேலைகளை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

 

இதுகுறித்து 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த டெல்லி போலீஸார் தலைமறைவான சத்யானந்த சரஸ்வதியை கைது செய்துள்ளனர்.

 

Edit by Prasanth.K