உச்சநீதிமன்ற தீர்ப்பை விட மோசமானது.. திமுகவை விமர்சித்த திருமாவளவன்...
தொகுதி மறுவரையறை என்கிற பெயரில் இந்தியா முழுவதும் உள்ள எல்லா மாநிலங்களிலும் பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பாஜக முடிவு செய்திருக்கிறது. கடந்த வருடம் இதற்கான மசோதாவை பாஜக பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்த மசோதாவுக்கு தொடக்கம் முதலே திமுக கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் தற்போது திடீரென பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவளிப்பதாக திமுக தெரிவித்துள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் 50 சதவீதம் வழங்குவதாக இருந்தால் இந்த மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவிக்கும் என திமுக எம்பி ஆ.ராசா செய்தியாளரிடம் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த திருமாவளவன் திருப்பரங்குன்றத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை விடவும் திமுக எடுத்துள்ள இந்த முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. இது நாட்டுக்கே பேராபத்தாக முடியும். ஒரே தேசம், ஒரே தேர்தல், ஒரே ஆட்சி என திட்டமிடும் சங்பரிவார்களின் திட்டத்திற்கு துணை போவது போல திமுக முடிவு அமைந்துள்ளது என அவர் கூறியிருக்கிறார்.