1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. udhyanidhi stalin comment about tvk mla behaviour

பேச்சுக்கு சொன்னத உண்மையாவே ஹனிமூன் பீரியட்னு நினைச்சிட்டாங்க!.. உதயநிதி நக்கல்..

arul vignesh
பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி மகளிர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என அவருக்கு சம்மன் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் அவர் விசாரணைக்கு ஆஜராகவிருக்கிறார்.

இந்நிலையில் அருள் விக்னேஷ் மீது கடுமையான நடவடிக்க வேண்டும் எனக் கூறி திமுக சார்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு வந்து நேரில் மனு அளித்தார். அதன் பின் அவர் செய்தியாளரிடம் பேசியதாவது..

ஒரு பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஒரு எம்.எல்.ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியது இந்திய அரசியல் வரலாற்றில் இதுதான் முதன்முறை. மே மாதம் இவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். ஜூலை மாதமே அந்த எம்.எல்.ஏ இப்படி செய்திருக்கிறார். குடித்துவிட்டு போய் கலெக்டரிடம் தகராறு செய்திருக்கிறார். ஆனால் கடந்த 116 நாட்களாக இதை மறைத்திருக்கிறார்கள்.

ஆட்சிக்கு வந்து முதல் ஆறு மாசம் ஹனிமூன் பீரியட் என சொன்னதை முதல்வரும், கட்சி எம்.எல்.ஏக்களும் உண்மையாகவே ஹனிமூன் என நினைத்துக் கொண்டார்கள்.
இந்த எம்.எல்.ஏ-வை முதல்வரால் எந்த கேள்வியும் கேட்க முடியாது. ஏனெனில் ‘நீங்க மட்டும் என்ன யோக்கியமா?’ என்ற அவர் திருப்பி கேட்கலாம் என்பதால் விஜய் வாயை மூடியிருக்கிறார்.

116 நாட்களாக எந்த நடவடிக்கை எடுக்காமல் விஜய் தூங்கிக் கொண்டிருக்கிறார். இது தொடர்பாக ஜூலை மாதமே பெண் கலெக்டர் தலைமைச் செயலரிடம் புகார் அளித்திருக்கிறார். ஆனால் அந்த தலைமை செயலர் நடவடிக்கை எடுக்காமல் பெண் ஆட்சியரிடம் ‘நீ இந்த மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டத்திற்கு சென்று விடு’ என்று பேரம் பேசியிருக்கிறார். அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்..

பெண் கலெக்டரின் புகாரை தலைமைச் செயலர் முதல்வரிடம்ம் சொன்னாரா என்பது தெரியவில்லை. சொல்லாமல் இருந்தால் அது தவறு.. சொல்லியிருந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் அது முதல்வரின் தவறு.. இந்த அரசின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை.. எனவேதான் சிபிஐ விசாரணை கேட்டிருக்கிறோம். முதலமைச்சர் தூக்கத்திலிருந்து எழுந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்’ என அவர் கூறியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் அருள் விக்னேஷ்? - நடப்பது என்ன?..