ஒரு வீரரின் பெருமையைக் கோப்பைகள் தீர்மானிக்காது- கோலிக்கு ஆதரவாக சேவாக் கருத்து!
சச்சின் காலத்துக்குப் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக உலகளவில் கிரிக்கெட்டின் முகமாக இருப்பவர் விராட் கோலி. அவர்தான் இன்றைய தேதியில் அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரராக உள்ளார். இதனால் அவரை சமூகவலைதளங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அதிக ரன்கள் குவித்த வீரர். அதிக சதங்கள் அடித்த வீரர் என பல சாதனைகளைத் தன் பேருக்குப் பின்னால் கொண்டுள்ளார்.
தேசிய அணிக்காகப் பெரும்பாலானக் கோப்பைகளை கோலி வென்றுள்ளார். ஆனால் 18 ஆண்டுகளாக நடந்து வரும் ஐபிஎல் தொடரில் அவர் இன்னும் ஒரு கோப்பையைக் கூட வெல்லவில்லை. இது அவரின் சாதனைப் பட்டியலில் ஒர் கரும்புள்ளியாக இன்றளவும் உள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இதுபற்றி பேசும்போது “ஒரு வீரரின் பெருமையைக் கோப்பைகள் தீர்மானிக்காது. ஏனெனில் கோப்பைகள் என்பது அணியின் சாதனையாக பார்க்கப்படுகிறது. நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறன், அவரின் சாதனைகள், அணி வெற்றி பெற உதவும் வகையில் ரன்களைக் குவிப்பது ஆகியவைதான் ஒரு வீரரின் பெருமையக் குறிக்கிறது. அப்படிப் பார்த்தால் விராட் கோலிக்குதான் முதலிடம்” எனக் கூறியுள்ளார்.