1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 6 மே 2025 (12:49 IST)

’நான்தான் அடுத்த சச்சின் என சொல்லிக் கொண்டிருப்பார்’- கோலியின் டீச்சர் பகிர்ந்த தகவல்!

சச்சின் காலத்துக்குப் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக உலகளவில் கிரிக்கெட்டின் முகமாக இருப்பவர் விராட் கோலி. அவர்தான் இன்றைய தேதியில் அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரராக உள்ளார். இதனால் அவரை சமூகவலைதளங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அதிக ரன்கள் குவித்த வீரர். அதிக சதங்கள் அடித்த வீரர் என பல சாதனைகளைத் தன் பேருக்குப் பின்னால் கொண்டுள்ளார்.

தற்போது ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி வரும் கோலி கடந்த ஆண்டு டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். இந்திய அணி டி 20 உலகக் கோப்பையை வென்ற கையோடு அவர் அந்த முடிவை அறிவித்தார்.

இந்நிலையில் கோலிப் பற்றி அவரது பள்ளி ஆசிரியை ஒருவர் ஒரு சுவாரஸ்யமானத் தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் “சிறுவயதில் கோலி அனைவரிடமும் நான்தான் அடுத்த சச்சின் என சொல்லிக்கொண்டிருப்பார். அப்போது நாங்கள் எல்லோரும் அதைக் கேட்டு சிரிப்போம். அவர் கல்வி மற்றும் விளையாட்டு என இரண்டிலும் சிறந்து விளங்கவேண்டும் என உழைத்தார்” எனக் கூறியுள்ளார்.