1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 6 மே 2025 (12:23 IST)

விராட் கோலிதான் ஆர் சி பி அணியின் மிஸ்டர் safety… ஆதங்கத்தைக் கொட்டிய டிவில்லியர்ஸ்!

சச்சின் காலத்துக்குப் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக உலகளவில் கிரிக்கெட்டின் முகமாக இருப்பவர் விராட் கோலி. அவர்தான் இன்றைய தேதியில் அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரராக உள்ளார். இதனால் அவரை சமூகவலைதளங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அதிக ரன்கள் குவித்த வீரர். அதிக சதங்கள் அடித்த வீரர் என பல சாதனைகளைத் தன் பேருக்குப் பின்னால் கொண்டுள்ளார்.

தற்போது ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி வரும் கோலி கடந்த ஆண்டு டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். இந்திய அணி டி 20 உலகக் கோப்பையை வென்ற கையோடு அவர் அந்த முடிவை அறிவித்தார். ஆனால் தற்போது ஐபிஎல் சீசனில் அவர் விளையாடும் விதத்தைப் பார்க்கும்போது அவர் வெகு சீக்கிரமாகவே ஓய்வை அறிவித்து விட்டார் என்று தோன்றுகிறது.

இந்த சீசனில் அதிக ரன்கள் வீரர்கள் பட்டியலில் அவர் முதலிடத்தில் உள்ளார். ஆனால் அவர் மிகவும் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதாக சில விமர்சனங்கள் எழுந்தன. அதுபற்றி தற்போது பேசியுள்ள ஆர் சி பி அணி முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் ‘’விராட் கோலி எப்போதும் ஆர் சி பி அணிக்காக இருந்தார். அவர்தான் அணிக்கான மிஸ்டர் safety. பத்திரிக்கை நண்பர்களே உங்களை எனக்குப் பிடிக்கும். ஆனால் கோலி மிகவும் பொறுமையாக விளையாடுகிறார் என்று சொன்னவர்களுக்காகதான்,சமீபத்தில் சி எஸ் கே அணிக்கு எதிராக சுமார் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் ஒரு இன்னிங்ஸ் ஆடினார். அதைப் பெற்றுக்கொள்ளுங்கள்’ எனக் கூறியுள்ளார்.