1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 6 மே 2025 (09:36 IST)

மூன்றாவது அணியாக நடையைக் கட்டிய சன் ரைசர்ஸ் ஐதராபாத்… ப்ளே ஆஃப் கனவைக் குலைத்த மழை!

கடந்த ஐபிஎல் தொடரில் காட்டடியாக விளையாடி இறுதிப் போட்டிவரை சென்று ரன்னர் ஆனது சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணி. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாடும் அணுகுமுறையைக் கொண்டுவந்தனர்.

இதன் காரணமாக அந்த அணியின் போட்டிகள் ரசிகர்களால் பெரிதும் விரும்பிப் பார்க்கப்பட்டது. ஆனால் இந்த சீசனில் அவர்களுக்கு அந்த அதிரடி ஆட்டமுறைக் கைகொடுக்கவில்லை.  தொடர்ந்து தோல்விகளாகப் பெற்று வந்த அவர்கள் ப்ளே ஆஃப் செல்வதற்கு இருந்த கடைசி வாய்ப்பையும் நேற்று இழந்தனர்.

டெல்லி அணிக்கு எதிரானப் போட்டி மழைக் காரணமாக முடிவு தெரியாமல் கைவிடப்பட்டதால், இனிமேல் ப்ளே ஆஃப்க்கு செல்ல முடியாத சூழல் அந்த அணிக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளும் வெளியேறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.