தமிழ் சினிமாவின் அறிமுக நடிகரான ப்ரதீப் ரங்கநாதனின் ரசிகர்கள் சென்னையில் தண்ணீர் பந்தலை அமைத்துள்ளது வைரலாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக உள்ளவர் ப்ரதீப் ரங்கநாதன். கோமாளி படத்தின் மூலம் இயக்குராக அறிமுகமான ப்ரதீப், லவ் டுடே மூலமாக நடிகராக அறிமுகமானார். அறிமுகமான முதல் படமே பெரும் ஹிட் அடித்த நிலையில், சமீபத்தில் இவர் நடித்து வெளியான ட்ராகன் படமும் ஹிட் அடித்துள்ளது. ப்ரதீப்பிற்கு இளைஞர்கள் பலரும் ரசிகர்களாகி வருகின்றனர்.
சென்னையில் கோடைக்காலத்தில் பல்வேறு நடிகர்களின் நற்பணி மன்றங்களும், அரசியல் கட்சிகளும் நீர் மோர், தண்ணீர் பந்தலை அமைத்து வருகின்றனர். அவர்களுக்கு நிகராக ப்ரதீப் ரங்கநாதன் ரசிகர் மன்றமும் பல பகுதிகளில் தண்ணீர் பந்தல் அமைத்துள்ளனர்.
ஒரு நடிகர் 2 படங்கள் மட்டுமே நடித்துள்ள நிலையில் அவருக்கு ரசிகர் மன்றம் வைப்பதும், சென்னையில் பல பகுதிகளில் தண்ணீர் பந்தலையும் அமைப்பதை பார்த்து வியந்துள்ள பலர், அடுத்து ப்ரதீப் அரசியல் கட்சியும் தொடங்கி விடுவார் போலிருக்கிறதே என்று நகைச்சுவையாய் கருத்து தெரிவித்துள்ளனர்.
Edit by Prasanth.K