1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 6 மே 2025 (16:41 IST)

‘இந்தாங்க திரைக்கதை..’ சூர்யாவிடம் ஒப்படைத்த வெற்றிமாறன் – வாடிவாசல் அப்டேட்!

தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலோடு காத்திருக்கும் படங்களில் ஒன்று சூர்யா மற்றும் வெற்றிமாறன் இணையும் ‘வாடிவாசல்’ திரைப்படம். ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டும் வெற்றிமாறன் மற்றும் சூர்யா ஆகியோரின் அடுத்தடுத்த பட வேலைகளால் இந்த படம் தாமதமாகிக் கொண்டே வந்தது.

விடுதலை 2 திரைப்படம் ரிலீஸையடுத்து வெற்றிமாறன் தற்போது ‘வாடிவாசல்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் ‘வாடிவாசல்’ திரைப்படத்துக்கான திரைக்கதையை செப்பனிடும் பணியை வெற்றிமாறன் தன்னுடையக் குழுவினரோடு செய்து வருவதாக சொல்லப்பட்டது.

இதற்கிடையில் தற்போது வெற்றிமாறன் திரைக்கதையை முடித்து சூர்யாவிடம் முழுத் திரைக்கதையையும் ஒப்படைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.அதனால் ஷூட்டிங் விரைவில் தொடங்கலாம் என சொல்லப்படுகிறது.