1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 30 ஏப்ரல் 2025 (09:55 IST)

சச்சின் ரி ரிலீஸ் வெற்றி.. அடுத்தடுத்து அஜித், சூர்யா படங்களை ரி ரிலீஸ் செய்யும் தயாரிப்பாளர் தாணு!

ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய், வடிவேலு, ஜெனிலியா உள்ளிட்ட பலர் நடித்து 2005ல் வெளியான படம் சச்சின். கலைபுலி எஸ் தாணு தயாரிப்பில் வெளியான இந்த படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். இந்த படம் முதல் ரிலீஸின் போது பெரிய வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில்  2005ல் வெளியான இந்த படம் அதன் 20வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் விதமாக கடந்த வியாழக்கிழமை ரீரிலீஸ் செய்யப்பட்டது. ரி ரிலீஸில் இந்த படத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது.

இதுபற்றி பேசியுள்ள தயாரிப்பாளர் தாணு “சச்சின் படம் ரிலீஸின் போது கணிசமான லாபத்தைக் கொடுத்தது. ஆனால் ரி ரிலீஸில் பத்து மடங்கு லாபம் கொடுத்துள்ளது. படம் 50 நாட்கள் ஓடும் என சொல்கிறார்கள். ஐம்பதாவது நாளில் அந்த படத்தின் கலைஞர்களை கௌரவிக்க உள்ளேன்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் அவர் தயாரிப்பில் உருவான அஜித்தின் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ மற்றும் சூர்யாவின் ‘காக்க காக்க’ ஆகிய படங்களையும் அடுத்தடுத்து ரி ரிலீஸ் செய்யும் வேலைகளில் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.