1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 8 மே 2025 (07:49 IST)

100 முறை அவுட் இல்லை.. 200 பேர் அவுட்.. நேற்றைய போட்டியில் தல தோனியின் சாதனைகள்..!

நேற்று சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில், சென்னை அணி அபார வெற்றி பெற்றது. 180 என்ற இலக்கை கொல்கத்தா அணி போட்டியில் நிர்ணயித்த நிலையில், சென்னை அணி 19.4 ஓவர்களில் 183 ரன்கள் எடுத்து சிறப்பாக வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சென்னை அணியின் கேப்டன் தோனி இரண்டு முக்கிய சாதனைகளை செய்துள்ளார் என்பது தற்போது வெளியாகி உள்ளது.

முதல் சாதனை என்னவெனில்  தோனி ஐபிஎல் தொடரில் இதுவரை 100 முறை அவுட் ஆகாமல் இருந்து போட்டியை முடித்துள்ளார். இது அவரது 'பினிஷிங்' திறமையை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கிறது.

இரண்டாவது சாதனை அவர் தனது விக்கெட் கீப்பிங் மூலம், மொத்தம் 200 பேட்ஸ்மேன்களை அவுட் செய்துள்ளார். இதில் 153 கேட்சுகள் மற்றும் 47 ஸ்டம்பிங்குகள் அடங்கும்.

தோனிக்கு அடுத்தபடியாக, தினேஷ் கார்த்திக் 174 பேரை அவுட் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Siva