ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து வெளியேற பிசிசிஐ முடிவு!
ஏப்ரல் மாதம் காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்துத் தாக்கியது. இதையடுத்து இந்த தாக்குதலுக்குப் பாகிஸ்தான் ராணுவம் பதில் தாக்குதல் நடத்த இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல் நான்கு நாட்கள் தொடர்ந்தது.
தற்போது இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்திக் கொள்ளும் முடிவை எடுத்துள்ள நிலையில் இயல்பு நிலை மெல்ல திரும்ப தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம், இனிமேல் ஆசிய கிரிக்கெட் தொடர்களில் விளையாடப் போவதில்லை என்ற முடிவை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆசிய கிரிக்கெட் சங்கத்தின் தற்போதைய தலைவராக பாகிஸ்தானின் அமைச்சர் மோசின் நக்வி உள்ளார். இதன் காரணமாகவும் பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக இந்திய அணி இனிமேல் ஆசியக் கோப்பைத் தொடர்களில் விளையாட முடியாத சூழல் உருவாகும்.