உடல் எடையைக் குறைத்து விமர்சனங்களுக்குப் பதிலளித்த சர்பராஸ் கான்!
இந்திய டெஸ்ட் அணியில் நீண்டகாலமாக வாய்ப்புக்காகக் காத்திருந்தார் சர்பராஸ் கான். ரஞ்சிப் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதையடுத்து சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரில் சில போட்டிகளில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றார்.
அந்த தொடரில் சில அரைசதங்களை அடித்துக் கலக்கினார். அதையடுத்து தற்போது நடந்து வரும் நியுசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் ஆஸி அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.
அவர் மேல் வைக்கப்பட்ட விமர்சனங்களில் ஒன்றாக இருந்தது அவரின் உடல் எடை. இதையடுத்து விரைவில் இங்கிலாந்துக்கு இந்திய அணி செல்லவுள்ள நிலையில் சர்பராஸ் கான் 10 கிலோ வரை உடல் எடையைக் குறைத்து ஃபிட்டாக மாறியுள்ளார். அவரின் சமீபத்தையப் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.