1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 17 மே 2025 (12:04 IST)

ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம்.. கனிமொழி உள்பட 40 எம்பிகள் குழு..!

kanimozhi
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஏப்ரல் 22-ஆம் தேதி பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலாக, மே 7-ஆம் தேதி "ஆபரேஷன் சிந்தூர்" எனப்படும் ராணுவ நடவடிக்கையை இந்தியா தொடங்கியது.
 
இந்த தாக்குதலில், பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதிகளில் செயல்பட்டுவரும் 9 பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சுமார் 100 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
 
இந்தத் திட்டம் தொடர்பான விபரங்களை உலக நாடுகளுக்கு தெளிவுபடுத்த, இந்திய எம்பிக்கள் அனுப்பப்பட உள்ளனர். இது போன்ற விளக்க பயணங்கள் மத்திய அரசால் முதன்முறையாக மேற்கொள்ளப்படுகின்றன.
 
பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் அதாவது சசி தரூர், ரவிசங்கர் பிரசாத், பைஜயந்த் பாண்டா, கனிமொழி, சஞ்சய் குமார் ஜா, சுப்ரியா சுலே, ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகியோர் குழுக்களுக்கு தலைமை வகிக்கின்றனர். ஒவ்வொரு குழுவிலும் 5 முதல் 8 பேர் வரை உள்ளனர்.
 
மொத்தமாக, 40க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று, இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க உள்ளனர். இந்த பயணம் அடுத்த வாரம் துவங்கும் என கூறப்படுகிறது.
 
Edited by Mahendran