1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu Govt Organises Statewide Special Camps to Issue Fast-Track Service Certificates for TET Teachers

TET தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு சிறப்பு முகாம்.. தமிழக அரசு ஏற்பாடு...

TET Exam 2026
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின்  அறிவிப்பைத் தொடர்ந்து, டிசம்பர் 2026-ல் நடைபெறவுள்ள TET தாள் I மற்றும் II தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஏதுவாக, மாநிலம் முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்காகச் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2025 செப்டம்பர் 1-க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
திருச்சி உட்பட அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலமாக இந்தச் சிறப்பு முகாம்கள் நடந்து வருகின்றன. ஆசிரியர்கள் தலைமை அலுவலகங்களுக்கும் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் அலைந்து திரிந்து சிரமப்படக் கூடாது என்ற மனிதாபிமான நோக்கத்துடன், ஒரே நாளில் சரிபார்க்கப்பட்டுப் பணிச்சான்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
தலைமை ஆசிரியர்கள் தங்களது ஆவணங்களை சரிபார்த்து அன்றைய தினமே பணிச்சான்றினை பெற்றுக்கொள்ளலாம். ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு எடுத்துள்ள இந்தத் துரிதமான நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் தரப்பிலிருந்து பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
பொங்கலுக்கு இலவச வேட்டி சேலை.. ஆயத்த பணிகளில் த்வெக அரசு தீவிரம்...