குழந்தைக்கு செலுத்தும் ரூ.9 கோடி மருந்து வெறும் ரூ.2.5 லட்சம்!.. இந்திய மருத்துவர் கண்டுபிடிப்பு!....
கடந்த சில வருடங்களாகவே AHDS மரபணு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஊசி செலுத்துவதற்காக ரூ.9 கோடி செலவாகிறது என்கிற செய்திகளை பார்க்கிறோம். மேலும், எங்களால் அவ்வளவு பணத்தை புரட்ட முடியாது எனக்குறி சமூக வலைதளங்களில் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோரும், சமூக ஆர்வலர்களும் அந்த குழந்தையின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து பொது மக்களிடம் பணம் வசூலித்து கொடுக்கும் வீடியோக்களை நிறைய பார்த்திருக்கிறோம்.. AHDS நோயால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி, உடல் இயக்கம், தசை வலிமை மற்றும் பேச்சுத்திறன் பாதிக்கப்படலாம்
ஒருபக்கம் இது போன்ற மருத்துவ செலவுக்கு நிறைய இணையதளங்கள் மூலமாகவும் நிதியும் திரட்டப்பட்டு வருகிறது. ரூ.9 கோடிக்கு மருந்து வாங்குவது என்பது ஏழைகளுக்கும், நடுத்த மக்களுக்கும் கற்பனை செய்து பார்க்க முடியாது ஒன்று.
இந்நிலையில், மிகவும் அரிய மரபணு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிகிச்சைக்கு தேவைப்படும் முக்கிய மருந்தான Tiratricol ஓராண்டுக்கு வாங்க ரூ.9 கோடி வரை செலவாகும் நிலையில், அந்த மருந்தை தற்போது ரூ.2.5 லட்சத்தில் தயாரிக்கும் வழி கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது..
ஹைதராபாத்தை சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் சிவரஞ்சனி முயற்சியில் இது சாத்தியமாகியிருக்கிறது. மேலும், இந்தியாவில் AHDS நோயால் பாதிக்கப்பட்ட 7 குழந்தைகளுக்கு ஓராண்டுக்கான மருந்துகள் இலவசமாக வழங்கப்படவிருக்கிறது.