வெள்ளி, 21 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 21 நவம்பர் 2025 (10:45 IST)

ஈரானிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்ய இந்திய நிறுவனத்திற்கு தடை: அமெரிக்கா அதிரடி..!

ஈரானிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்ய இந்திய நிறுவனத்திற்கு தடை: அமெரிக்கா அதிரடி..!
ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு மறைமுகமாக நிதி செல்வதை தடுக்கும் நோக்கில், ஈரானிடம் இருந்து பெட்ரோலிய பொருட்களை கொள்முதல் செய்த இந்திய நிறுவனம் உட்பட 17 சர்வதேச நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது.
 
2018-இல் அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய பிறகு, ஈரான் மீதான பொருளாதார தடைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டன. சட்டவிரோத பெட்ரோலிய கொள்முதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஈரானிடம் எண்ணெய் வாங்கும் நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
 
தடைப்பட்டியலில் 'டிஆர்6 பெட்ரோ இந்தியா எல்எல்பி' என்ற பெட்ரோலிய வர்த்தக நிறுவனமும் இடம்பெற்றுள்ளது. இந்த நிறுவனம், அக்டோபர் 2024 முதல் ஜூன் 2025 வரை ஈரானில் இருந்து சுமார் ரூ.80 கோடி மதிப்புள்ள தார் போன்ற பொருட்களை இறக்குமதி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
 
 
Edited by Mahendran