வெள்ளி, 21 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 19 நவம்பர் 2025 (11:10 IST)

டிரம்புடன் ஒரே ஒரு சந்திப்பு தான்.. 1 டிரில்லியன் டாலர் முதலீடு செய்யும் சௌதி அரேபிய பட்டத்து இளவரசர்

டிரம்புடன் ஒரே ஒரு சந்திப்பு தான்.. 1 டிரில்லியன் டாலர் முதலீடு செய்யும் சௌதி அரேபிய பட்டத்து இளவரசர்
சௌதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தினார். டிரம்ப், இராணுவ மரியாதையுடன் இளவரசரை வரவேற்றார்.
 
சந்திப்பின்போது, அமெரிக்காவிலிருந்து எஃப்-35 போர் விமானங்கள் ஏற்றுமதி ஒப்பந்தங்கள், வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வணிகம் குறித்து பேசப்பட்டது.
 
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப், அமெரிக்காவில் 600 பில்லியன் டாலர் முதலீடு செய்ய இளவரசர் ஒப்புக்கொண்டதற்கு நன்றி தெரிவித்தார். மேலும், இளவரசர் தனது நண்பர் என்பதால், இந்த முதலீடு விரைவில் 1 டிரில்லியன் டாலரை எட்டும் என்றும் எதிர்பார்ப்பதாக கூறினார். இந்த முதலீடு அமெரிக்காவில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் என்றார்.
 
இளவரசர் முகமது பின் சல்மானும், அமெரிக்காவில் செய்யப்படவுள்ள முதலீடுகள் விரைவில் ஒரு டிரில்லியன் டாலர் அளவை தொடும் என்று உறுதி அளித்தார்.
 
Edited by Mahendran