சவுதி அரேபியா பேருந்து தீப்பிடித்து விபத்து.. 45 பேர் பலி.. ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்..!
சவுதி அரேபியாவில் மக்காவிலிருந்து மதீனா நோக்கி சென்ற இந்திய உமாரா யாத்ரீகர்கள் பயணித்த பேருந்து, அதிகாலையில் எண்ணெய் டேங்கர் லாரியுடன் மோதி தீப்பிடித்ததில், 45 பேஎர் பலியானதாக அஞ்சப்படுகிறது.
ஆனால் இந்த துயரத்திலும் அப்துல் ஷோயப் முகமது என்ற ஒரே ஒரு பயணி மட்டுமே அதிசயமாக உயிர்தப்பி, மதீனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை ஜெட்டாவின் இந்திய துணைத் தூதரக அதிகாரி சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஐதராபாத்தில் இருந்து சென்ற 54 யாத்ரீகர்களில் 45 பேர் வரை பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. உடல்கள் எரிந்த நிலையில் இருப்பதால், அடையாளம் காண்பதில் சிக்கல் நீடிக்கிறது.
இறந்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ ஜெட்டாவில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க சிறப்பு அவசரக் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளார்.
Edited by Siva