ஒரே ஒரு வீட்டை தவிர எனது வருமானம் முழுவதையும் கட்சிக்கு தருவேன்: பிரசாந்த் கிஷோர்
பீகார் சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்த தனது ஜன சூராஜ் கட்சியின் நிதி மற்றும் கட்டமைப்பை வலுப்படுத்த, பிரசாந்த் கிஷோர் அதிரடி முடிவுகளை அறிவித்துள்ளார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தனது வருமானத்தில் 90 சதவீதத்தையும், ஒரேயொரு ஒரு வீட்டை தவிர மற்ற அனைத்து சொத்துக்களையும் கட்சிக்கு நன்கொடையாக வழங்க போவதாக அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
தோல்விக்கு பிறகு கட்சியை மீட்டெடுக்க, 'பீகார் நவ்நிர்மாண் சங்கல்ப் அபியான்' என்ற புதிய திட்டத்தையும் அவர் அறிவித்துள்ளார். இதன் கீழ், கட்சி வரும் ஜனவரி 15ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் உள்ள 1,18,000 வார்டுகளுக்கும் சென்று, மக்களுடன் நேரடியாக பேசி, அரசின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யும்.
சமீபத்திய தேர்தலில் 238 தொகுதிகளில் போட்டியிட்டும் ஒரு இடத்திலும் வெற்றி பெறாததால், தனது முடிவு ஒரு "தவறு" என்று பிரசாந்த் கிஷோர் வருத்தம் தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக, அவர் மேற்கு சம்பாரனில் உள்ள காந்தி ஆசிரமத்தில் ஒரு நாள் மௌன விரதத்தையும் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva