1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. scientist found water in mercury planet

புதன் கிரகத்தில் பனிக்கட்டி?!.. மனிதர்கள் உயிர் வாழமுடியுமா?.. ஆய்வில் கண்டுபிடிப்பு...

mercury
பூமியை தவிர மற்ற கிரகங்களில் மனிதர்கள் வாழ முடியுமா என்கிற ஆராய்ச்சி பல வருடங்களாக பல நாடுகளும் செய்து வருகின்றன. அதில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியும் என்கிற நம்பிக்கை விஞ்ஞானிகளுக்கு இருப்பதால் எனவே அங்கு மனிதர்களை குடியேற்றும் முயற்சியில் பல நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன..

ஒருபக்கம் செவ்வாய் அல்லாது மற்ற கிரகங்களிலும் மனிதர் வாழக்கூடிய அடிப்படை வசதிகள் குறிப்பாக ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீர் ஆகியவை இருக்கிறதா என பல வருடங்களாகவே ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில்தான், சூரியனுக்கு மிகவும் அருகில் உள்ள புதன் கோளில் பனிக்கட்டி வடிவில் நீர் இருப்பது தொடர்பாக Bepicolombo விண்கலம் ஆய்வு செய்யவிருக்கிறது. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனமும்(ESA), ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனமும் (JAXA) இணைந்து 2018ம் வருடம் இந்த விண்கலத்தை விண்ணில் ஏவின.

2012ம் வருடம் நாசாவின் MESSENGER விண்கலம், புதன் கோளின் துருவப் பள்ளங்களில் பனிக்கட்டி இருப்பதற்கான ஆதாரங்களை கண்டுபிடித்தது. இதுபற்றிய விரிவான ஆய்வுகளை BepiColombo விண்கலம் 2027ம் வருடம் ஏப்ரல் மாதம் முதல் மேற்கொள்ளவிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
பாகிஸ்தான் வரைபடத்தை மாற்ற போகிறார் அசிம் முநீர்.. ஆழமான அரசியல் மாற்றமா?