எச்-1பி விசா கட்டண உயர்வு: அமேசான், டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பு?
அமெரிக்காவில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான எச்-1பி விசா கட்டணம், அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பின்படி, $100,000 ஆக அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாற்றம், வெளிநாட்டு ஊழியர்களை அதிக அளவில் பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக அமெரிக்காவின் முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களும், இந்திய ஐடி சேவை நிறுவனங்களும் இந்த முடிவால் அதிகம் பாதிக்கப்படும். பாதிக்கப்படும் சில முக்கிய நிறுவனங்களின் பட்டியல் இதோ:
அமேசான்: 10,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பணியாளர்களை கொண்டு முதலிடத்தில் உள்ளது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், மைக்ரோசாஃப்ட், மெட்டா: 5,000க்கும் அதிகமான வெளிநாட்டு பணியாளர்கள்.
ஆப்பிள், கூகிள்: 4,000க்கும் அதிகமான வெளிநாட்டுப் பணியாளர்கள்.
காக்னிசண்ட், ஜேபி மார்கன், வால்மார்ட், டெலாய்ட்: 2,000க்கும் அதிகமான வெளிநாட்டுப் பணியாளர்கள்.
இந்த நிறுவனங்கள் இனிமேல் தங்கள் வெளிநாட்டு பணியாளர்களுக்காக இந்த பெரும் தொகையை செலவிட வேண்டியிருக்கும். இது இந்திய ஐடி துறை ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran