வியாழன், 2 அக்டோபர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 20 செப்டம்பர் 2025 (10:49 IST)

9 கோடி ரூபாய் கொடுத்தால் அமெரிக்கா வர தங்க விசா அட்டை.. அறிமுகம் செய்து வைத்த டிரம்ப்..!

9 கோடி ரூபாய் கொடுத்தால் அமெரிக்கா வர தங்க விசா அட்டை.. அறிமுகம் செய்து வைத்த டிரம்ப்..!
அமெரிக்காவில் குடியேற்ற கொள்கையை மறுசீரமைக்கும் முயற்சியில், அதிபர் டொனால்ட் ட்ரம்ப், புதிய 'கோல்ட் கார்டு' குடியுரிமை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த திட்டத்ற்கான உத்தரவில் அவர் நேற்று கையெழுத்திட்டார்.
 
'ஈபி-5' என்ற முதலீட்டாளர் விசா திட்டத்திற்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய 'கோல்ட் கார்டு' திட்டத்தின் கீழ், அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற விண்ணப்பிப்பவர்கள், ரூ.9 கோடி என்ற தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும்.
 
ஒரு தனிநபர் விண்ணப்பித்தால், கட்டணம் ஒரு மில்லியன் டாலர்என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ₹ 8.8 கோடி ஆகும்.
 
நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்காக விண்ணப்பித்தால், கட்டணம் இரண்டு மில்லியன் டாலர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.17.6 கோடி ஆகும்.
 
'கோல்ட் கார்டு' திட்டத்துடன், H-1B விசாவுக்கான கட்டணத்தையும் ஒரு லட்சம் டாலராக உயர்த்துவதற்கான நிர்வாக உத்தரவிலும் ட்ரம்ப் கையெழுத்திட்டார். இந்த அதிரடி நடவடிக்கை, அமெரிக்காவில் பணியாற்ற விரும்பும் இந்திய தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Mahendran