1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Actress Kasthuri Denies Rumors of Joining TVK

தவெகவில் இணைகிறாரா நடிகை கஸ்தூரி? அவரே அளித்த விளக்கம்..

நடிகை கஸ்தூரி
தான் தவெக கட்சியில் இணைய போவதாக சமூக ஊடகங்களில் பரவிவரும் வதந்திகளுக்கு பாஜக நிர்வாகியும் நடிகையுமான கஸ்தூரி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதன் பின்னணியில் அரசியல் வயிற்றெரிச்சல்தான் காரணம் என்று அவர் மிகவும் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
 
பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் பணியால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்ததாக குறிப்பிட்டுள்ள அவர், தமிழக பாஜக மாநிலத் தலைமையே தனது வழிகாட்டி என்றும், எக்காலத்திலும் பாஜகவிலேயே உறுதியாகத் தொடர்வேன் என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார். 
 
மேலும், அமைச்சர் ஒருவருடன் பொதுமேடையில் நாகரிகமாக பேசிய உரையாடலை திரித்து, வக்கிரமாக சித்தரித்துத் தன் மீது அவதூறு பரப்புவதாகவும் அவர் கடும் கண்டனம் தெரிவித்தார். பெண்மை, ஜாதி மற்றும் தொழில் ரீதியாகத் தன்னை இழிவுபடுத்தும் இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களுக்கும், மலிவான வதந்திகளுக்கும் தான் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என அவர் தெளிவுபடுத்தியுள்ளார். 
 
அரசியல் களத்தில் கொள்கை முரண்கள் இருக்கலாம், ஆனால் தனிமனித விரோதத்தை தான் எப்போதுமே ஆதரித்ததில்லை என்றும் அவர் கூறினார். அரசியல் ரீதியாக தன்னை முடக்க நினைக்கும் சதித்திட்டங்களை தமிழக மக்கள் நன்றாகவே புரிந்துகொள்வார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
இந்த வெற்றிக்கு விஜய் மட்டுமே காரணம்!. சத்யபாமா, மரகதம் குமரவேல் நெகிழ்ச்சி..