காலம் கனிந்தது.. பழம் நழுவி பாலில் விழுந்தது.. உங்களுக்கு ஏன் காண்டு?!.. கொந்தளித்த திருமா...
2026 சட்டமன்றத் தேர்தலில் தவெகவுக்கு 108 தொகுதிகள் கிடைத்த போது ஆட்சி அமைக்க மேலும் 10 எம்.எல்.ஏக்கள் தேவைப்பட்டனர். அப்போது திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தனர்.
அதன் காரணமாக தற்போது கூட்டணி ஆட்சி அமைந்திருக்கிறது. விடுதலை சிறுத்தை, காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு விஜய் அமைச்சர் பதவி கொடுத்துள்ளார். விசிகவில் வன்னியரசுக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கிறது. இதையடுத்து, அமைச்சர் பதவிக்காக திருமாவளவன் கட்சி மாறிவிட்டார் என திமுகவினர் தொடர்ந்து அவரை விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று திண்டுக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திருமாவளவன் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என நாங்கள் எதையும் செய்யவில்லை.. அது தானாக நடந்தது.. விசிகவுடனான கூட்டணியை திமுக தக்க வைத்துக் கொள்ளவில்லை. இடைத்தேர்தலில் இரண்டாம் இடம் பெற்றதாக திமுக கூறுகிறது.. அப்படியெனில் முதலிடம் பெற கூட்டணி தேவையல்லவா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் தமிழ்நாட்டில் ஒரு கூட்டணி அரசு உருவாகும் என நான் பல வருடங்களாக சொல்லிக் கொண்டிருந்தேன்.. அமைச்சரவையில் இடம் பெற தவெகவிடம் நாங்கள் பேசவில்லை.. தூது விடவில்லை.. பேரம் பேசவில்லை.. காலம் கனிந்தது.. பழம் நழுவி பாலில் விழுந்தது என அவர் பேசியிருக்கிறார்..