ஃபுல் ஆக்ஷன்.. பக்கா மாஸ் சீன்ஸ்!.. டாக்சிக் டிரெய்லர் வீடியோ ரிலீஸ்...
கே.ஜி.எப் திரைப்படம் மூலம் பேன் இந்தியா நடிகராக மாறியிருப்பவர் யாஷ். கே.ஜி. எப் முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் கன்னடத்தில் உருவானாலும் தெலுங்கு, தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் பல கோடி வசூலை அள்ளியது.
இந்த படத்திற்கு பின் யாஷ் நடித்திருக்கும் திரைப்படம் டாக்சிக். இந்த திரைப்படம் வருகிற 26ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில்தான், தற்போது இந்த படத்தின் டிரைலர் வீடியோவை படக்குழு வெளியிட்டிருக்கிறது.
கேங்ஸ்டரான அப்பாவுக்கும் அவரின் மகனுக்கும் இடையே நடக்கும் மோதல் காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருக்கிறது. இரண்டு கதாபாத்திரத்திலும் யாஷே நடித்திருக்கிறார். டிரெய்லரில் அசத்தலான ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றுள்ளதை பார்க்கும்போது கண்டிப்பாக டாக்சிக் திரைப்படம் யாஷ் ரசிகர்களுக்கும், ஆக்சன் விரும்பிகளுக்கும் விருந்தாக அமையும் என கணிக்கப்படுகிறது.
இந்த படத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.