1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 23 மே 2025 (10:49 IST)

50 லட்சம் பேரால் பார்க்கப்பட்ட தக் லைஃப் படத்தின் ‘ஷுகர் பேபி’ பாடல்!

நாயகன் என்ற கல்ட் கிளாசிக் படத்தைக் கொடுத்த கமல்ஹாசன் –மணிரத்னம் கூட்டணி 35 ஆண்டுகளுக்குப் பிறகு ‘தக் லைஃப்’ படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. படம் ஜூன் மாதம் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதற்கிடையில் படத்தின் டிரைலர் ரிலீஸாகி கவனம் பெற்றுள்ளது.

இதற்கிடையில் சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தில் இருந்து ‘ஷுகர் பேபி’ என்ற பாடல் வெளியானது. திரிஷா நடித்துள்ள இந்த பாடலின் காட்சியமைப்பும், வரிகளும் விமர்சனங்களை சந்தித்தாலும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. வெளியான 2 நாட்களில் 50 லட்சம் பேருக்கு மேல் இந்த பாடலைப் பார்த்துள்ளனர்.