1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 24 மே 2025 (16:04 IST)

நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள் திவ்யா!

பிரபல நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணராக இருந்து வருகிறார்.  ’மகிழ்மதி இயக்கம்’ என்ற அமைப்பை ஆரம்பித்து நடத்தி வரும் திவ்யா சத்யராஜ், இந்த இயக்கத்தின் மூலம் ஊட்டச்சத்து குறைந்த மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை அளித்து வந்தார்.  இவர் திருமணம் செய்துகொள்ளாமல் தனியராக வாழ்ந்து வருகிறார்.

தனக்கு அரசியலிலும் ஆர்வம் உள்ளதாகக் கூறியிருந்த அவர் திமுகவில் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அடிக்கடி திமுக சம்மந்தப்பட்ட மேடைகளில் கலந்துகொண்டு எதிர்க்கட்சிகளைக் குறிப்பாக, விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தினரை விமர்சித்துப் பேசி வருகிறார்.

இந்நிலையில் திவ்யா சத்யராஜ் விரைவில் ஒரு வெப் சீரிஸ் மூலமாக நடிகையாக அறிமுகமாகவுள்ளார். இந்த வெப் சீரிஸை மிஷ்கினிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய ஒருவர் இயக்கவுள்ளதாகவும் இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.