1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 23 மே 2025 (12:11 IST)

நான் பாகிஸ்தானை காப்பாற்றுகிறேன்.. ராணுவம் என்னிடம் பேசலாம்.. அழைப்பு விடுத்த இம்ரான்கான்..

சிறையில் இருக்கிற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தற்போது நாட்டில் காட்டுத்தனமான சட்டம் நிலவுகிறது என விமர்சித்து, நான் பாகிஸ்தானை காப்பாற்ற தயார், இதுகுறித்து ராணுவம் என்னிடம் நேரடியாக பேசலாம் என தெரிவித்தார்.
 
இந்தியா உடன் சமீபத்திய சண்டையில் இடம்பெற்ற பங்களிப்புக்காக, ஜெனரல் முனீர், பாகிஸ்தான் வரலாற்றில் இரண்டாவது ஃபீல்ட் மார்ஷலாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
 
"மாஷா அல்லாஹ், அவர் ஃபீல்ட் மார்ஷலாக உயர்ந்திருக்கிறார். ஆனால், இப்போ நாட்டில் காட்டுத்தனமான சட்டம் தான் நடக்கிறது, அங்க ஒரே ஒரு மன்னர்தான் இருக்கிறார்," என X-இல் இம்ரான்கான் பதிவு செய்துள்ளார்.
 
ஆகஸ்ட் 2023 முதல் பல வழக்குகளில் சிறையில் உள்ள கான், தன்னுடன் ஒப்பந்தம் நடந்துவிட்டதாக பரவும் பேச்சுகள் முற்றிலும் பொய்யானவை என்றும் கூறினார். "எந்த உரையாடலும் நடக்கவில்லை. நாட்டைச் சரிவிலிருந்து காப்பாற்ற விரும்பினால், ராணுவம் என்னிடம் நேரடியாக பேசலாம்" என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
 
"பாகிஸ்தான் வெளிநாட்டு அச்சுறுத்தல்கள், பயங்கரவாதம், பொருளாதார நெருக்கடி ஆகியவற்றை சந்திக்கிறது. நான் ஒருபோதும் எனக்கென எதையும் கேட்கவில்லை," என்றார்.
 
இந்தியா மீண்டும் தாக்கலாம் என எச்சரித்த அவர், ஷெபாஸ் சரீப் அரசு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார்.
 
"பாகிஸ்தானில் தற்போது  பெரிய திருடர்கள் தான் பெரிய பதவியில் இருக்கிறார்கள். ஜனநாயகமே அழிக்கப்படுகிறது. நீதியும், சட்டமும் மாறிக்கொண்டு இருக்கின்றன," என தெரிவித்தார்.
 
 
Edited by Mahendran