திங்கள், 24 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 23 மே 2025 (16:18 IST)

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!
உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளில் ஒருவரான ஏ.எஸ். ஓகா, இன்று  தனது கடைசி பணிநாளை நிறைவு செய்தார். ஆனால், மரபை மீறி, அந்த நாளில் கூட 10 வழக்குகளில் தீர்ப்பு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இரண்டு நாட்களுக்கு முன் தனது தாயார் வசந்தி ஓகா காலமான போதும், கடமை உணர்வால் பணிக்கு திரும்பிய ஓகா, நேற்று  இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு, இன்று நீதிமன்ற அமர்வில் கலந்துகொண்டு தீர்ப்புகளை வழங்கினார். இது அவரது அர்ப்பணிப்பு மற்றும் நேர்மையை வெளிப்படுத்துகிறது.
 
இன்று, இளைஞர்களின் தனியுரிமை குறித்த கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் கருத்துக்களை தொடர்ந்து தாமாக முன்வந்த ஒரு வழக்கை ஓகா விசாரித்ததும் குறிப்பிடத்தக்கது.
 
பின்னர், தலைமை நீதிபதி பி.ஆர். கவாயின் அமர்வுக்கு வந்த ஓகா, "பணி ஓய்வுநாளில் எந்தப் பணியும் கொடுக்கக்கூடாது என்ற மரபை நான் ஏற்கவில்லை. வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கியதில் திருப்தி அடைகிறேன்" எனப் பகிர்ந்தார்.
 
ஏ.எஸ். ஓகாவின் சேவைக்கு வழக்குரைஞர்கள் பாராட்டு தெரிவித்தனர். அவரின் பணித்திறன், எதிர்கால நீதிமன்ற நீதிபதிகளுக்கான முன்மாதிரியாகும்.
 
Edited by Mahendran