இம்ரான்கானின் அனைத்து சமூக வலைத்தளங்களுக்கும் தடை.. மோடி அரசின் இன்னொரு அதிரடி..!
முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் அனைத்து சமூக வலைதளங்களுக்கும் மோடி அரசு தடை விதித்துள்ளதாக கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மாதம் 22ஆம் தேதி காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர், இந்தியா–பாகிஸ்தான் போர் எந்த நேரத்திலும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள பிரபலங்கள் தங்களுடைய சமூக வலைதளங்களில் இந்தியாவை குறித்து அவதூறாகவும் பொய்யான தகவல்களையும் பதிவிட்டு வருவதை அடுத்து, பல சமூக வலைதள பக்கங்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது.
பல YouTube சேனல்கள், பாகிஸ்தான் நியூஸ் சேனல்கள் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் அனைத்து சமூக வலைதள பக்கங்களும் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இம்ரான் கான் தற்போது சிறையில் இருந்தாலும், அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதள பக்கங்கள் மூலம் அவதூறான கருத்துக்களை வெளியிட்டு வருவதால், மோடி அரசு அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
Edited by Siva