துருக்கியில் இருந்து பாகிஸ்தான் வந்த போர்க்கப்பல்.. இந்தியாவை தாக்கவா?
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், துருக்கி கடற்படையின் TCG Buyukada என்ற கப்பல் பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது. இதன் மூலம் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. பாகிஸ்தான் இதை "நல்லிணக்க பயணம்" என்று விளக்கினாலும், இந்தியா பாகிஸ்தான் போர் ஏற்பட்டால், இந்தியாவை தாக்க இந்த கப்பல் வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்தியாவின் ஜம்மு & காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் அண்மையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, அவற்றில் சிந்து ஆற்றின் நீர் ஒப்பந்தம் இடைநிறுத்தப்படுவது முக்கியமானது.
இந்த நிலையில், பாகிஸ்தான் கடற்படை துருக்கியின் TCG Buyukada கப்பலை கராச்சி துறைமுகத்தில் வரவேற்றுள்ளது. இந்த பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் என கூறப்படுகிறது.
துருக்கியும் பாகிஸ்தானும் பல ஆண்டுகளாக பாதுகாப்பு மற்றும் இராணுவச் சேவைகளில் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் துருக்கி இந்த பயணத்தை பாகிஸ்தானுக்கு ஆதரவு காட்டும் ஒரு நிலையாக மாற்றுகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்தியா இதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பதும் ஒரு முக்கிய விஷயமாகும்.