1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 28 மே 2025 (14:19 IST)

தொடர்ந்து செய்த தவறு… இம்பேக்ட் பிளேயருக்கும் சேர்த்து அபராதம்!

ஐபிஎல் 2025 சீசனின் கடைசி ப்ளே ஆஃப் போட்டி நேற்று லக்னோவில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரிஷப் பண்ட்டின் அதிரடி சதத்தின் மூலம் 227 ரன்கள் சேர்த்தது. ரிஷப் பண்ட் இந்த சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் 11 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களோடு 61 பந்துகளில் 118 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து ஆடிய ஆர் சி பி அணியும் தொடர்ந்து அதிரடியாக ஆடியது. அந்த அணியின் கோலி அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து அவுட் ஆன பின்னர், ஆர் சி பி அணியின் வெற்றி கேள்விக்குறியானது. ஆனால் அதன் பின்னர் மயங்க் அகர்வால் மற்றும் ஜிதேஷ் ஷர்மா கூட்டணி அமைத்து அதிரடியாக ஆடி 19 ஆவது ஓவரிலேயே இலக்கை எட்டினர்.

இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் அந்த அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் இது மூன்றாவது  முறை என்பதால் லக்னோ அணியின் இம்பேக்ட் பிளேயர் உட்பட அனைவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கேப்டன் ரிஷப் பண்ட்டுக்கு 30 லட்ச ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.