தோத்தாலும் நீ மனசுல நின்னுட்டயா… ரிஷ்ப் பண்ட் செயலை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!
ஐபிஎல் 2025 சீசனின் கடைசி ப்ளே ஆஃப் போட்டி நேற்று லக்னோவில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரிஷப் பண்ட்டின் அதிரடி சதத்தின் மூலம் 227 ரன்கள் சேர்த்தது. ரிஷப் பண்ட் இந்த சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் 11 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களோடு 61 பந்துகளில் 118 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து ஆடிய ஆர் சி பி அணியும் தொடர்ந்து அதிரடியாக ஆடியது. அந்த அணியின் கோலி அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து அவுட் ஆன பின்னர், ஆர் சி பி அணியின் வெற்றி கேள்விக்குறியானது. ஆனால் அதன் பின்னர் மயங்க் அகர்வால் மற்றும் ஜிதேஷ் ஷர்மா கூட்டணி அமைத்து அதிரடியாக ஆடி 19 ஆவது ஓவரிலேயே இலக்கை எட்டினர்.
இந்த போட்டியில் ஜிதேஷ் ஷர்மா மரண அடி அடித்துக் கொண்டிருந்த போது லக்னோ அணி பவுலர் திக்வேஷ் மன்கட் முறையில அவரை ரன் அவ்ட் செய்து அப்பீல் செய்தார். இதையடுத்து கள நடுவர் மூன்றாம் நடுவரிடம் அப்பீல் செய்தார். ஆனால் ரிஷப் பண்ட் அந்த அப்பீல் வேண்டாம் என்று களநடுவரிடம் சொல்லிவிட்டார். அதே போல மூன்றாம் நடுவர் சோதித்த போதும் திக்வேஷ் ஆக்ஷனை முடித்தபின்னர்தான் ஜிதேஷ் வெளியேறினார் என்பதால் நாட் அவுட் முடிவுக்கு வந்துவிட்டார். ஆனாலும் ரிஷப் பண்ட் ஸ்போர்ட்டிவ்வாக நடந்துகொண்டது ரசிகர்களை நெகிழச் செய்துள்ளது.