1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 28 மே 2025 (08:30 IST)

ஜிதேஷ் ஷர்மா அதிரடி… இமாலய ஸ்கோரை சேஸ் செய்து இரண்டாம் இடத்துக்கு சென்ற ஆர் சி பி!

ஐபிஎல் 2025 சீசனின் கடைசி ப்ளே ஆஃப் போட்டி நேற்று லக்னோவில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரிஷப் பண்ட்டின் அதிரடி சதத்தின் மூலம் 227 ரன்கள் சேர்த்தது. ரிஷப் பண்ட் இந்த சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் 11 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களோடு 61 பந்துகளில் 118 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து ஆடிய ஆர் சி பி அணியும் தொடர்ந்து அதிரடியாக ஆடியது. அந்த அணியின் கோலி அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து அவுட் ஆன பின்னர், ஆர் சி பி அணியின் வெற்றி கேள்விக்குறியானது. ஆனால் அதன் பின்னர் மயங்க் அகர்வால் மற்றும் ஜிதேஷ் ஷர்மா கூட்டணி அமைத்து அதிரடியாக ஆடி 19 ஆவது ஓவரிலேயே இலக்கை எட்டினர்.

ஆர் சி பி அணியைத் தற்காலிகமாக வழிநடத்திய ஜிதேஷ் ஷர்மா 33 பந்துகளில் 85 ரன்கள் சேர்த்து வெற்றி நோக்கி அணியை வழிநடத்தினார். அவருக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது பெங்களூர் அணி. நாளை நடக்கும் குவாலிஃபையர் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்ளவுள்ளது.