வெள்ளி, 28 நவம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 28 நவம்பர் 2025 (10:32 IST)

Stranger things வெளியானதும் முடங்கிய நெட்பிளிக்ஸ் தளம்!

Stranger things வெளியானதும் முடங்கிய நெட்பிளிக்ஸ் தளம்!
நெட்ப்ளிக்ஸில் வெளியாகி உலகம் முழுவதும் பிரபலமான வெப் சிரிஸான Stranger Things-ன் இறுதி சீசன் நேற்று வெளியானது.

உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள ஓடிடி தொடர்களில் Stranger Things முக்கியமான இடத்தில் உள்ளது. 2016ம் ஆண்டில் இதன் முதல் சீசன் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்து இதுவரை 4 சீசன்கள் வெளியாகி பெரும் வெற்றி பெற்றுள்ளது. 

இதையடுத்து ஐந்தாவது மற்றும் இறுதி சீசனின்  முதல் நான்கு எபிசோட்கள் நேற்று நெட்பிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகின. அந்த எபிசோட்கள் வெளியான நிலையில் அதிகளவில் பார்வையாளர்கள் அந்த சீரிஸைப் பார்க்கத் தொடங்கியதால் ஐந்து நிமிடங்களுக்கு நெட்பிளிக்ஸ் தளமே முடங்கியுள்ளது. அதன் பின்னர் அந்த பிரச்சனை சரி செய்யப்பட்டுள்ளது.