1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : ஞாயிறு, 25 மே 2025 (08:23 IST)

’தக்லைஃப்’ படத்தின் எந்த உரிமையையும் விற்கவில்லை.. இசை வெளியீட்டு விழாவில் கமல்..!

’தக்லைஃப்’ திரைப்படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமை தவிர, வேறு எந்த உரிமையையும் நானும் மணிரத்னமும் இருக்கவில்லை என நேற்று நடந்த இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல் கூறியது ஆச்சரியத்தை அளித்துள்ளது.
 
கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணையும் படம் என்பதால், ’தக்லைஃப்’ படத்தை வாங்க உலகம் முழுவதும் போட்டி ஏற்பட்ட நிலையில், கமல்ஹாசன் இந்த படத்தை விற்க விரும்பவில்லை என்றும், நாங்களே சொந்தமாக ரிலீஸ் செய்வதாகவும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
"டிஜிட்டல் மற்றும் டிவி உரிமையை மட்டுமே விற்று இருக்கிறேன். மற்ற எல்லா உரிமையும் நானும் மணிரத்னம் ஆகிய இருவர் மட்டுமே விநியோகம் செய்ய இருக்கிறோம். இந்த படத்தின் மீது எந்த அளவுக்கு நம்பிக்கை இருந்தால், நாங்கள் இதை செய்வோம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்," என்றும் தெரிவித்துள்ளார்.
 
"எங்களுக்கு ஓரளவு வியாபாரம் தெரியும். நல்ல சினிமாவை தயாரித்து முதலீடு செய்து இருக்கிறோம். விதை போட்டு 'சினிமா' என்ற விவசாயம் செய்கிறோம். இந்த விவசாயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இந்த படம் வெற்றி பெற்று நல்ல லாபம் கிடைத்தால், அடுத்தடுத்து நல்ல படங்களை கொடுப்போம். மேலும், எனது கட்சிக்கும் இதில் வரும் லாபத்தை செலவு செய்வேன். எனது சொந்த பணத்தை மட்டுமே அரசியலுக்காக செலவு செய்வேன்," என்று தெரிவித்துள்ளார்.
 
அவரது பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva